நாகை கல்வி மாவட்டத்தில் வேதாரண்யம் முதலிடம்

பிளஸ்2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. வேதாரண்யம் தூய அந்தோனியர் மெட் ரிக் மேனிலைப்பள்ளி நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றது.
இப்பள்ளி மாணவன் ரஞ்சித்குமார் 1169 மதிப்பெண் எடுத்து முதலிடத்தையும், கோ வேந்தன் 1144 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடமும், ஸ்ரீதேவி 1143 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். இப்பள்ளியில் 21 பேர் 1000க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். நாகை கல்வி மாவட்டத்தில் இப்பள்ளி முதலி டம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வின் செண்ட் பாராட்டினார். 

வேதாரண்யம் கஸ் தூர்பா காந்திகன்யா குருகுலத்தில் 1131 மதிப் பெண் பெற்று ஜெயலெட் சுமி முதலிடத்தையும், 1115 மதிப்பெண் எடுத்து ரமா தேவி இரண்டாமிடத்தை யும், 1104 மார்க் எடுத்து புவனா மூன்றாமிடத்தை யும் பெற்றனர். 

இப்பள்ளி 97 சதவிகித தேர்ச்சி பெற் றது. ஆயக்காரன்புலம் நடேசனார் ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 1155 மதிப்பெண் பெற்று பிரவின்குமார் முதலிடத்தையும், 1141 மார்க் எடுத்து சீனிவாசன் இரண்டாமித்தையும், 1137 மார்க் எடுத்து சத்தியன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். 

ஆயக்காரன்புலம் பெண்கள் மேனிலைப்பள்ளியில் 1125 மதிப்பெண் எடுத்து கிருத்திகா முதலிடத்தையும், 1124 மதப்பெண் எடுத்து கவிதா இரண்டாமித்தையும், 1113 மதிப்பெண் எடுத்து ஸ்ரீபா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேனிலைப்பள்ளியில் மாணவர் ராஜகுமார் 1097 மதிப்பெண் எடுத்து முதலிடத்தையும், ராம்கி 1077 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடத்தையும், ஐயப்பன் 1059 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
Powered by Blogger.

Social Icons

Followers

Featured Posts