1 மாணவருக்கு 2 ஆசிரியர் மூடப்பட்ட கோவிந்தன்காடு நடுநிலைப்பள்ளி

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 52 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. 5 ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றிவந்தனர். அரசின் வசதிகள் இப்பள்ளிக்கு கிடைத்தாலும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்துகொண்டே வந்தது. கடந்த கல்வி ஆண்டில் 5 ஆம் வகுப்பில் 3 மாணவர்களும் , 2 ஆம் வகுப்பில் 1 மாணவரும் படித்து வந்தனர்.  

அவர்களில் 5 ஆம் வகுப்பு 3 மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற்று 6 ஆம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். 2 ஆம் வகுப்பில் இருந்த மாணவர் வெற்றி பெற்று 3 ஆம் வகுப்பிற்கு வந்தார் . இதனால் 1 மாணவருக்கு 2 ஆசிரியர் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டது பள்ளி . தனியாக படிக்க விரும்பாத அந்த மாணவரும் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார் . 

இதனால் அந்த பள்ளியை மூடிவிட்டார்கள் . தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளின் நிலை இதுவே !! இந்த நிலைக்கு என்ன காரணம் என்று ஆராய்வோம். படிக்காதவர்களை பார்த்து படிக்கற காலத்தில் படிக்காமல் விட்டால் இந்த நிலை தான் என்கிறோம் . அது போல பாடம் நடத்தும் காலத்தில் ஆசிரியர்கள் சரியாக செயல்படாதது தான் காரணம் . அதனால் பெற்றோர்கள் நம்பிகை இழந்து விட்டார்கள் . 

கடந்த கால ஆட்சியில் ஆசிரியர்கள் சுகமாக இருந்து விட்டார்கள் , அதன் விளைவு தான் இது . ஆசிரியர்கள் இதனை தவறாக கொள்ள வேண்டாம் , எனது தாயும் ஒரு ஆசிரியர் தான் . அவரின் நிலைமை இன்னும் மோசம் , அந்த பள்ளியில் மாணவர்களை தக்கவைப்பதற்காக மாணவர்களின் வீட்டுக்கு சென்று கெஞ்சி கொண்டு இருக்கிறார். எனவே அரசும் ஆசிரியர்களும் கடுமையாக உழைத்தால் தான் அரசு பள்ளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க செய்ய முடியும்
Powered by Blogger.

Social Icons

Followers

Featured Posts