வேதாரண்யம் தகட்டூரில் உள்ள ஊதாவெட்டி குளத்தில் ஆகாய தாமரை மண்டி கிடக்கிறது. இதை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் தாலுகா தகட்டூர் கடைத்தெருவில் ஊத்தாவெட்டிகுளம் உள்ளது. இக்குளம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தகுளம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் அருகில் உள்ள வர்த்தகர்களுக்கும் பயன்பட்டு வந்தது. இந்தகுளம் தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரை மண்டியும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டியும் தற்போது தூர்ந்து காணப்படுகிறது. மேலும் குளம் தற்போது ஆக்கிரமிப்பிலும் உள்ளது.
குளம் தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரை மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பல ஆண்டுகளாக தூர்வராப்படாமல் உள்ள இந்த ஊத்தாவெட்டி குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை